Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 9. ஆசிரியரின் டைரி

ஆசிரியரின் டைரி
ஜான் ஹோல்ட்
தமிழில்:எம்.பி.அகிலா.    
யுரேகா வெளியீடு

அமெரிக்க கல்வியாளர் ஜான்ஹோல்ட் 15 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர். தமது வகுப்பு மாணவர்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கி நாட்குறிப்புபோல பதிவுசெய்துவந்தார். அது How Children Fail? என்ற பெயரில் புத்தகமானது.மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்நூலின் தமிழ் வடிவமே ஆசிரியர் டைரி.


ஜான் ஹோல்ட் காட்டும் வகுப்பறையும் மாணவர்களும் நமது வகுப்பு மாணவர்கள் போலவே இருக்கிறார்கள்.
குழந்தைகளின் சிறுசிறு அசைவுகளையும், உளச்சிக்கல்களையும் ,கற்றல் குறைபாடுகளையும் நுட்பமாக அறிந்து அதற்காக காரணங்களையும், தீர்வுகளையும் முன்வைக்கும் நூல்.

மாணவர்களின் குறையாக நாம் நினைப்பவை எங்கிருந்து உருவாகின்றன என்று தெரிந்து கொள்ள விரும்பும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டியது நூல் இது.



No comments:

Post a Comment