Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 29. பள்ளிக்கூடத் தேர்தல்

பள்ளிக்கூடத்  தேர்தல்
நல்லாசிரியர்களைத்தேர்ந்தெடுத்தமாணவர்கள்.
பேரா. நா.மணி

பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.


ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு  நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொருமுறை விருதுகள் அறிவிக்கப்படும்போதும்... விருது வழங்கப்படுகிறதா அல்லது வாங்கப்படுகிறதா? இவ்விருதுக்கான தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?தகுதியான ஆசிரியர்களுக்குதான் இவ்விருது வழங்கப்படுகிறதா?
என்ற கேள்விகள் ஒலிக்கும் நிலையில்...

மாணவர்களே நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்னும் சிந்தனையைச் செயல்படுத்திய அனுபவமே இந்தப் புத்தகம் .

கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , தாங்கள் படித்த 12-ஆம் வகுப்பு வரையிலான படிப்பில் நல்ல ஆசிரியர்கள் யார் என்ப் பட்டியலிடுகிறார்கள், ஏன் அவர்கள் தங்களுக்கு நல்ல ஆசிரியர் என்பதனை விளக்கி எழுதிக் கொடுக்கின்றார்கள்

 எப்படி எல்லாம் அந்த ஆசிரியர்கள் , தாங்கள் முன்னேற உதவி புரிந்தார்கள் என்பதனை மாணவ, மாணவிகளே விவரிக்கும் விதத்தை ஒரு அத்தியாயமாக இந்த நூலின் ஆசிரியர் பேரா. .மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையான நல்லாசிரியர்களை தோழர் மணி நமக்கு அடையாளம் காட்டி இருப்பது புதிய உத்வேகத்தை அளிக்கும் சிறப்பான புதிய பாதையாகும்.

 இந்த நூலை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தான் ஒரு ஆசிரியராக ஆகவேண்டும் என்று விரும்புவார்கள். இதை வாசிக்கும் ஆசிரியர்களோ தான் தன் மாணவர்களால் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றப்படும் ஒரு நல்ல ஆசிரியராக பணியாற்ற வேண்டும் என்று துடிப்பார்கள்.
அனைத்து கல்வியாளர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

No comments:

Post a Comment