என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா
ச.மாடசாமி
பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
சென்னை-600018.
கல்விச்சிந்தனைகள் என்றாலே பாவ்லோ ப்ரேயர்,மரியா மாண்டிசோரி,யஷ்பால் கமிட்டி என நமது வழக்கமான பட்டியல் நீளும். ச.மாடசாமி அவர்களது எழுத்து முற்றிலும் மாறுபட்டது.
மாணவர்களை மையப்படுத்திய கலகலப்பான ஜனநாயகமான வகுப்பறையே அவர் தொடர்ந்து வலியுறுத்துவது. ஆழமான சிந்தனைகளை எளிமையாக மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்டுத்துகிறார்.
"ஆசிரியரை பயந்த சர்வாதிகாரி என்று சொல்வதுண்டு.சுற்றிலும் எதைப்பார்த்தாலும் பயந்து அரளுவார்.வகுப்பறைக்குள் மட்டும் ஒரு சர்வாதிகாரிபோலக் காட்டிக்கொள்ளப் பார்ப்பார். சிவப்பு பால்பாயிண்ட் பேனா அதற்குள் அதிகாரம் கொட்டிக்கிடக்கிறது".
ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய சிறுநூல்.
No comments:
Post a Comment