குழந்தைமை: புதிரும் அற்புதமும்
மேரியா மாண்டிசோரி.
தமிழாக்கம் :
சி. ந. வைத்தீஸ்வரன்
சாளரம் வெளியீடு.
குழந்தைகளின் உளவியல், வளர்ப்புமுறை, கல்விமுறை பற்றி பிரபலமான கல்வியாளர் மேரியா மாண்டிசோரி எழுதிய The Secrets of Childhood நூலின் தமிழாக்கம்.
ஆசிரியர் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி என்பதில்லை . கல்வி என்பது, ஒரு தனி மனிதன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இயற்கைச் செயல்பாடு என்பது மாண்டிசோரியின் புரிதல்.ஐம்புலன்கள் வழியாக சுற்றுச்சூழலை அனுபவமாக உணரும்போதுதான், கற்கும் செயல்பாடு சாத்தியம் என்கிறார் அவர்.
வலுக்கட்டாயமாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளச் செய்வதற்குப் பதிலாக, ஒரு செயல்பாட்டை மகிழ்ச்சி யாகவும் பிடித்த மாதிரியும் இயல்பாகச் செய்து பார்த்து, செய்து பார்த்து மனதில் பதிவதுதான் உண்மையான கல்வி.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாகக் குழந்தைகளை மாற்றுவதற்குப் பதிலாக, சிறகை விரித்து உலகின் ஆச்சரியங்களை அனுபவிக்க நூறாண்டுகளுக்கு மேலாக அவர்களுக்கு உதவிக்கொண்டிருப்பது மாண்டிசோரி கல்வி முறை.
மாண்டிசோரி முறையின் அடிப்படைகளை புரிந்துகொள்ள உதவும் நூல்.
No comments:
Post a Comment