எனது இந்தியா
எஸ்.ராமகிருஷ்ணன்
விகடன் பிரசுரம்.
ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.இந்தியாவின் நான்கு திசைகளிலும் பயணித்தவராக,படித்தவராக,ஆவணங்கள் தொடங்கி ஆராய்ச்சிகள் வரை பகுத்துப் பார்த்தவராக ‘எனது இந்தியா’ நூலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
மகாத்மாவின் கொலை வழக்கில் இருந்து தொடங்கும் இந்நூல், மொகலாயர்களின் படையெடுப்பு, மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரியணையைப் பிடிப்பதற்காக நடந்த சதிகள், நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த போர்கள், வளம் கொழித்து செல்வச் செழிப்போடு விளங்கிய இந்தியாவின் நிலை, வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பின்னால் வணிகம் என்ற போர்வையில் இந்தியா சுரண்டப்பட்ட கோலம் என இந்திய வரலாற்றுச் சம்பவங்களை தெளிந்த நீரோடையின் ஓட்டமாகச் சொல்லி இருக்கிறார் .
இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சி அதிகார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை நிலை, கலாசாரம், பண்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம், மொகலாயர்கள் காலத்தில் இந்தியாவின் நிலை, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மக்கள் சந்தித்த கொடுமைகள், ஜாலியன் வாலாபாக் படுகொலை, தேசப் பிரிவினையின்போது நிகழ்ந்த வெறிச் செயல்களின் கோரத் தாண்டவம் என எண்ணிலடங்காத வரலாற்றுச் சம்பவங்களை மிக சுவாரசியமாக பதிவு செய்திருக்கும் இந்த நூல் இந்தியாவின் பூர்வீகத்தைத் தெளிவுபடுத்தும் பேரறிவுப் பெட்டகம்.
No comments:
Post a Comment