Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 10 தமிழகத்தில் மாற்றுக் கல்வி


தமிழகத்தில் மாற்றுக் கல்வி
( முன்னனி கல்விச் சிந்தனையாளர்களுடன் ஓர்  உரையாடல் )


தொகுப்பு:B.R.மகாதேவன். 
கிழக்கு பதிப்பகம்
177/103 அம்பாள் கட்டடம்
அவ்வை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை-600014.


நம் நாட்டில் கல்விக்கூடங்கள் பெருகிய அளவுக்கு அறிவாற்றல் பெருகவில்லை.பள்ளிக்கட்டணம் உயர்ந்த அளவுக்கு சிந்தனைத்திறன் வளரவில்லை.

ஒரு மாபெரும் தொழிற்சாலையைப் போல் இயந்திரகதியில் மாணவர்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன பள்ளிக்கூடங்கள்.

இந்தநிலையை மாற்றுவது எப்படி என்பதை தமிழகத்தின் முன்னணி கல்விச் சிந்தனையாளர்களான வெ.வசந்திதேவி,.தமிழ்ச்செல்வன், ஆயிஷா.இரா.நடராஜன்,தோழர்.தியாகு,தடா.பெரியசாமி உள்ளிட்ட 9 சிந்தனையாளர்கள் விரிவாக விவாதித்திருக்கிறார்கள்.

கல்வி அமைப்பில் மாற்றம் விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகமிது.







No comments:

Post a Comment