Saturday, August 5, 2017

ஆசிரியர் நூலகம் 54 கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி

54   கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
வசீலி சுகம்லீன்ஸ்கி.      
 தமிழில்
:.வள்ளிநாயகம், .அம்பிகா
                                   பாரதி புத்தகாலயம்.
                                                 

ஒரு கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 35 ஆண்டுகள் சோவியத் நாட்டில் பணியாற்றிய வசீலி சுகம்லீன்ஸ்கி

"
இதயம் தருவோம் குழந்தை களுக்கு….` என்ற மிகப்பிரபலமான நூலை எழுதினார். இந்நூலின் மறுவரைவாக தமிழில்கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளிவெளிவந்துள்ளது.

மனிதர்களது பழக்கவழக்கங்கள்,சிந்தனை,பகுத்தறியும் உணர்வு,சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச்சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக்கொள்வதாக கூறும் வசீலி 
"குழந்தை உருவங்களாகச் சிந்திக்கிறது;பெருவெள்ளமாக அறிவைக் குழந்தை மீதுகொட்டாதீர்கள்"
"தாய்மொழியில் தேர்ச்சி பெறாது அதன்அழகை உணராத ஒருவன் மற்ற மொழிகளில் நிபுனராக முடியாது"

என்றெல்லாம் தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல அரிய கருத்துகளைப்பதிவு செய்துள்ளார்.

தொடக்கக்கல்வியை சமூகத்துக்கு பயனுள்ளதாக மாற்ற நினைக்கும் அனைவருக்குமான புத்தகமிது.

No comments:

Post a Comment