பாரதி புத்தகாலயம்.
421 அண்ணாசாலை
தேனாம்பேட்டை
நம்
கல்விமுறை தங்களுக்கு சேவை செய்ய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறோம்.
நம் மண்ணுக்கேற்ற கல்விமுறை பற்றி யாரும் சிந்திக்கவேயில்லையா?
இருந்தார்கள் நமக்கான கல்விமுறை பற்றிய மகத்தான கனவுகளோடும் செயல்திட்டங்களோடும் பல அறிஞர்கள் நம்மிடையே உண்டு. ஆனால் அவர்களின் சிந்தனைகள் எதுவும் நமது வகுப்பறைகளை எட்டவில்லை.
பல்வேறு அறிஞர்களின் கல்விச்சிந்தனைகளை பாரதி புத்தகாலயம் தனித்தனி நூல்களாக தொகுத்துள்ளது பாராட்டப்படத்தக்க முக்கிய முயற்சி.
அந்த வகையில் காந்தியின் கல்விச்சிந்தனைகளின் தொகுப்பு இது.
இந்திய வகுப்பறைகள் குழந்தைகளுக்கு ஏற்றவையாக இல்லை; போதனா முறைகள் குழந்தைகளை மையமாகக் கொண்டவையல்ல.
தாய்மொழி மூலமே கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம் நாட்டிலுள்ள வாழ்க்கைநிலைமைகளுடன் தொடர்புஉள்ளதாக இருக்க வேண்டும்;மிகவும் ஏழையான இந்தியன் கூடமிகச் சிறந்த கல்வி பெறுவதற்கானநிலைமை தோற்றுவிக்கப்படவேண்டும்’ என்பவை காந்தியின்கல்விச் சிந்தனைகள்.
காந்தியின் சிந்தனைகளை கருத்தில்கொண்டால் நமது பல சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும்.
No comments:
Post a Comment