Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 47. மொழித்திறம்.


மொழித்திறம்.
மகுடேசுவரன்
தமிழினி பதிப்பகம்

சும்மா இரு..
சும்மா சொல்லு.. என்கிறோம்.
உண்மையயில் இந்த 'சும்மா' வின் வேர் என்ன?.

இந்த காடு.....இந்தக்காடு
வாழ்த்துகள்.....வாழ்த்துக்கள்
வலைதளம்....வலைத்தளம்
இவற்றில் எது சரி?.

படிக்கிற வயதில் சரியாகத்தான் எழுதினோம்.நாட்படத்தான் இந்த குழப்பமெல்லாம்.

மகுடேசுவரனின் இந்நூல் மொழியின் இனிமையையும்,சொற்களின் வேர்த்தன்மையும் நடைமுறையில் நாம் செய்யும் பிழைகளைக் களையும் வழிமுறைகளையும் எளிதில் புரிகிற வகையில் விளக்குகிறது.


இலக்கன நூலென்று பயப்படத்தேவையில்லை.தொல்காப்பிய சூத்திரங்களைக் கூறி பயமுறுத்தாமல் இயல்பாக மொழியின் அழகையும் ,
நுட்பங்களையும் சிறு செய்திகளாக தருவது சிறப்பு.

கவிஞர் மகுடேசுவரன் மொழியியல் அறிஞரோ,தமிழ் பண்டிதரோ,ஆய்வு மாணவரோ அல்ல.
தனது சுய ஆர்வத்தால் ,நுணுகிய பார்வையால் நாளும் தமிழின் புதிய

அவர் மொழியோடு நிகழ்த்திய முகநூல் விளையாட்டு இந்நூல்.
புதிய தெளிவு தருவதோடு நம்மையும் இதுபோல சிந்திக்கத்தூண்டுவதே நூலின் வெற்றியாகும்
 

……………………….
பி.கு
மேற்கண்ட குறிப்பிலுள்ள பிழைகளை கவிஞர் மன்னிப்பாராக.
 


No comments:

Post a Comment