எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?
தமிழில்: ஜே.ஷாஜஹான்
வாசல் பதிப்பகம்.வெற்றியாளர்களின் சாதனைகளையே கேட்டுப்பழகிய இந்த சமூகத்தில் தோற்றவர்களின் கதைகளுக்கு இடமில்லை.
இந்நூல் தோற்றவர்களின் கதைகளை பேசுகிறது.
இத்தாலி நாட்டு பள்ளிக்கூடங்களில் பெயிலாக்கப்பட்டு வீதிக்குத் துரத்தப்பட்ட மாணவர்கள் தாங்கள் பெயிலாக்கப்பட்டது ஏன் என்று அரசை நோக்கி கேட்ட கேள்வியின் அறச்சீற்றம் இது.
35 மதிப்பெண் எடுத்தவன் பாஸ் 34 எடுத்தவன் பெயில்.34 க்கும் 35 க்கும் இடையில்தான் இவர்கள் வாழ்வு தொலைந்தது.
இப்படி வாழ்வை தொலைத்த 8 ஏழை மாணவர்களால் எழுதப்பட்ட Letter to a teacher என்ற நூல் உலகெங்கும் சிந்தனையாளர்களை உலுக்கியது.அந்நூலின் சாரமே இச்சிறுநூல்.
இந்நூல் ஆசிரியரை நோக்கி மட்டுமல்ல ,மனசாட்சியுள்ள அனைவரையும் நோக்கி எழுதப்பட்டது
இனிதான் படிக்கனும்
ReplyDelete