இன்றைய காந்தி
ஜெயமோகன்
தமிழினி பதிப்பகம்
இந்துக்களின் துரோகி..ஏமாற்றுக்காரர்..!முஸ்லிம்களுக்கு அதிக சலுகை காட்டி போலி மதச்சார்பின்மையை அன்றே ஆரம்பித்து வைத்தவர்..பகத்சிங் தூக்கிலப்படுவதை தடுக்காதவர்..
நேதாஜியின் மறைவுக்கு காரணமானவர்..
காந்தியைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் திட்டமிட்டு முன்வைக்கப்படும் இக்காலத்தில், உலக வரலாற்றில் காந்திக்குறிய இடம் என்ன?.
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில் பின்நவீனத்துவ காலகட்டத்தில், மார்க்ஸியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் தோல்வியடைந்துவிட்ட சூழலில், என்ன மதிப்பு இருக்கமுடியும் என்று ஆராயக்கூடிய நூல் இது.
காந்திமீது முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் ஐயங்களையும இந்நூலில் ஜெயமோகன் விரிவாக ஆராய்கிறார். காந்தியின் தனிவாழ்க்கையையும் அவரது போராட்டமுறைகளையும் பரிசீலிக்கிறார். காந்தியப் போராட்டவழிமுறைகள் இன்றைய சூழலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானவை என்றும் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற இலட்சியத்தின் இன்றைய பெறுமானம் என்ன என்றும் விவாதிக்கிறார்.
பல்வேறு வாசகர்களுடனான கேள்விபதிலாக ஆரம்பித்த உரையாடல் இந்நூல் வடிவை அடைந்துள்ளது.
உலக சிந்தனையில் காந்தி இன்று வகிக்கும் இடம் என்ன என்பதை இந்நூல் இன்றைய இளம் வாசகனுக்குக் காட்டும் மிக முக்கியமான நூலாகும்.
No comments:
Post a Comment