Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 25.ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்


ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின்   குறிப்புகள்
பி..குப்புசாமி

விஜயா பதிப்பகம்
20 ராஜவீதி
கோவை – 641001.
பேச 914222577941


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் 40 ஆண்டுகாலம் ஆசிரியப்பணியாற்றியவர் குப்புசாமி ஐயா.
கற்பித்தல் பணியில் அர்ப்பணிப்பும், குழந்தைகளிடம் பாசாங்கற்ற நேசமும், பள்ளியோடு இணைந்த சமூகத்தோடு இறண்டற கலந்த இவரைப்போன்ற ஆசிரியர்களை தற்போது காண்பதறிது.
தன் கிராமத்துப் பள்ளி அனுபவம் ஒவ்வொன்றாகச் சொல்ல நம் குழந்தைகளின் உலகம் விரிகிறதுஅவர்களின் சாகசங்கள் கோபதாபங்கள்குட்டிக்கனவுகள் ரசனைகள் என...
வீட்டில் திருடுகிற மாணவனுக்கு தினமும் ஒரு ரூபாய் தந்து திருடும் பழக்கத்திலிருந்து அவனை மீட்பதும், பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவனிடம்நீ நேற்று வராததால் எனக்குப் பாடம் நடத்தவே மூடு இல்லைடாஎன்று சந்தனம் பூசி அவனை தினமும் பள்ளிக்கு வரும்படி செய்வதும்...
அவசியம் ஆசிரியர்கள் படிக்கவேண்டிய பொக்கிஷம் இது.

 



No comments:

Post a Comment