முதல் ஆசிரியர்
சிங்கிஸ் ஐத்மாத்தவ்
பாரதி புத்தகாலயம்.
சோவியத் நாட்டில் ஒரு மலையடிவாரத்திலிருந்தது குர்கூரெவு எனும் சிற்றூர். ஏழ்மையின் பிடியில் வாடிய பல நாடோடிக் குடும்பங்கள் அங்கே வசித்தனர்.
அங்கிருந்த சிறுவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற்காக அவ்வூருக்கு வருகிறான் துய்ஷேன் எனும் இளைஞன்.
தனக்குத் தெரிந்தவற்றை அக்குழந்தைகளுக்குக் கற்றுத் தந்துவிட வேண்டுமென்ற ஆர்வமே உந்து சக்தியாக இருந்து அவனை இயக்கியது. முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வந்திருக்கும் அப்பிஞ்சுகளுக்குக் கல்வி புகட்டுவதில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் ஈடுபட்டான். தங்களிடம் அன்பு பாராட்டி, இனிமையாகப் பழகிய அந்த இளம் ஆசிரியரிடம் பிள்ளைகளும் மிகுந்த நேசத்துடன் பழகினர்; ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.
புறக்கணிப்பால் சோர்ந்துவிடாத செயலார்வம்; இன்னல்களைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் போராடும் வீரம்; குழந்தைகளின் மீதான நேசம்; அவர்களது கல்வி வளர்ச்சியின்பால் கொண்டிருந்த அக்கறை; எல்லா இடையுறுகளையும் சாமாளிக்கும் துய்ஷேனின் மன உறுதியில் அந்த சமூகம் வெளிச்சம் பெறுகிறது.
புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர் சிங்கிஸ் ஐத் மாத்தவ்வின் மிக முக்கியமான நாவல் இது.
No comments:
Post a Comment