Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 40. இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி?


இவர்களுக்கு ஏன்  இல்லை கல்வி ?
பேரா. நா. மணி
                                                                 பாரதி புத்தகாலயம் .




கல்வி உரிமைச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைளுக்கும் கட்டாயம் இலவசக் கல்வி வழங்கப்பட வேண்டும்.
உண்மையில் நடப்பதென்ன?.

14 வயதுக்குள் வெவ்வேறு காரணங்களால் பள்ளியைவிட்டு நின்ற 25 குழந்தைகளை சந்தித்து உரையாடல் நடத்தியதன் தொகுப்பு இந்நூல்.

பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று வந்த பாரதி கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையால், குடிகாரத் தந்தையால் 9 ஆம் வகுப்பில் இடைநின்று ஊரை விட்டு ஈரோடு வந்து அச்சகத் தொழிலாளி ஆன கொடுமை.

13 வயதே ஆன நிலையில் தினமும் குப்பை பொறுக்கி அதன் மூலம் வரும் வருவாயில் தன்னையும் நோயுற்ற தனது தாயையும் காத்து , போதாதற்கு கந்துவட்டி கடனுக்கு வட்டிவேறு கட்டிக் கொண்டிருக்கும் விஜயா.

ஒவ்வொரு குழந்தையின் சூழலும் நம் மனசாட்சியை உலுக்கி கண்ணீரை வரவழைக்கிறது.

இந்நூலை படித்தபிறகாவது பள்ளிக்கு வராத காரணத்துக்காக நம்முன் கூனிக்குறுகி நிற்கும் மாணவனை தண்டிக்காமல் அரவணைக்கக் கற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment