ஒவ்வொரு
குழந்தையையும் நேசிப்போம்
ஜேனஸ் கோர்ச்சாக்
தமிழில்:தனபால்
புக்ஸ் பார் சில்ரன்.
ஜேனஸ் கோர்ச்சாக் மருத்துவம்
படித்து, குழந்தைகள் மருத்துவராகப்
போலந்து முழுவதும் பிரபலமானவர்.
முப்பது வயதில் குழந்தைகள்
உலகத்தில் கரைத்துக்கொண்டு, கல்வியாளராய்
கடைசிமூச்சுவரை நுணுக்கமான
ஆய்வு வாழ்க்கையில் ஈடுபட்டவர்.
கடைசியில் இட்லரின் நாஜியிசக்
கொலைவெறிக்கு குழந்தைகளோடு பலிகொள்ளப்படும்
கோர்ச்சாக்கின் வாழ்க்கை,
படிக்கும் ஒவ்வொருவரிடமும் கண்டிப்பாக
பாதிப்பை உண்டாக்கும்.
கோர்ச்சாக்கின் குழந்தைகள்
உறவினர் யாருமற்ற அநாதைப்
பிள்ளைகள். அவர்களைக் கண்ணுங்
கருத்துமாகப் பராமரித்து வந்த
அவர் தன்னுடைய நுட்பமான
அனுபவங்களை இச்சிறு புத்தகத்தில்
21 சிறுசிறு தலைப்புகளில் நுண்ணுணர்வு
மிக்க சிந்தனைகளாக பதிவு
செய்திருக்கிறார்.
குழந்தைகளைப் பற்றிய தற்போதைய
அணுகுமுறைகள் அனைத்தும் மாற்றப்பட
வேண்டியவை என்று ஆணித்தரமாகக்
கூறும் கோர்ச்சாக். “குழந்தைகளை
அறிய முயல்வதற்கு முன்பு
நீங்கள் உங்களை முதலில்
அறிந்து கொள்ளுங்கள்” என்கிறார்.
குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க
புதிய பார்வையைத் தரும்
நூலிது.
No comments:
Post a Comment