Saturday, August 5, 2017

ஆசிரியர் நூலகம் 49.முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
நா. முத்துநிலவன்  
 .  அகரம் பதிப்பகம்.
……………….

எம்.பி.பி.எஸ்.படித்தால் மருத்துவர் ஆகலாம், பி..படித்தால் பொறியாளர்ஆகலாம்.
பி.எல்.படித்தால் வழக்குரைஞர் ஆகலாம், ..எஸ்.படித்தால் மாவட்டஆட்சியர் ஆகலாம், எதுவுமே படிக்காமல் மந்திரியும் ஆகலாம்.

என்ன படித்தால் மனிதர் ஆகலாம்

34 ஆண்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியராகவும், தமிழிலக்கிய. படைப்பாளியாகவும் அறியப்பட்ட கவிஞர் நா. முத்துநிலவனின் கல்விச் சிந்தனைகளின் தொகுப்பு இது.

பூக்களாய் மணம் வீசுகிற இந்தக் குழந்தைகள் பாடப் புத்தகங்களைக் கண்டதும் வாடிப் போவது ஏன்?
இந்தக் கல்வித் திட்டம் ஏன் கசக்கிறது?
இது ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் என்னென்ன?
கல்வி பயணிக்கும் பாதை சரியானதுதானா? இத்தகைய கேள்விகளுக்காகவும், எதிர்காலத் தலைமுறை கேட்கப் போகிற கேள்விகளுக்காகவும்
எழுதப்பட்ட கட்டுரைகள்.

சமச்சீர்க் கல்வி, நல்லா சிரியர் விருது, கோடை விடுமுறை, தனியார்ப் பள்ளிகள், பாட நூல்களில் தமிழ், தமிழ்வழிக் கல்வி, பாடத்திட்டத்தில் ஊடகம்  என நூலிலுள்ள 19 கட்டுரைகளும் சுய சிந்தனைகளோடு நம்மிடம் கலந்துரையாடுகின்றன.கல்வியாளர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாண வர்கள் என சகலரும் வாசிக்க வேண்டியது இந்நூல்.




No comments:

Post a Comment