Saturday, August 5, 2017

ஆசிரியர் நூலகம்- 60 . நீர் நிலம் வனம்: கடல்


நீர் நிலம் வனம்: கடல்
     சமஸ் 
                            தி இந்து வெளியீடு.
                                                                             
            இந்த நூல் பேசுவது சூழலியலா? வரலாறா? அரசியலா?
-
எல்லாமும்தான்.


சமஸின் இந்தக் கட்டுரைகள்   சமூகத்தின் விளிம்பில் கடலை நம்பி வாழும் மனிதர்களின் கடல்சார் வாழ்க்கை பற்றி கரிசனத்தோடு பேசுவதுடன்
நமது பேராசையின் கரங்களால் கடலோரப் பகுதிகளில் நிகழ்ந்துவரும் சூழலியல் அழிவுகளை பதிவுசெய்கிறது.


பழவேற்காடு துவங்கி ராமேஸ்வரம் வரையேயான நீண்ட கடற்கரை சமூக விரோதிகளால்,அரசியல் வாதிகளால், தரகர்களால், பேராசை கொண்ட தொழில் அதிபர்களால் சீரழிக்கப்படுவதை இக்கட்டுரைகள் நேர்படப் பேசுகின்றன.

சூழல் அழிவு என்று வெற்று கூக்குரலிடாமல் நீண்ட களப்பயணத்தில் பல இடங்கள், மனிதர்களின் வாய்மொழி வழியாக விரியும் சுவாரசியமான நூலிது.

தனுஷ்கோடி புயலும், போட் மெயில் வரலாறும் நூலின் உச்சம் எனலாம்.
தமிழில் இது புதுவித எழுத்து. நமக்கு புதிய உலகத்தை/ அனுபவத்தை தரக்காத்திருக்கிறது.

1 comment:

  1. Very very..... happy. உனது ஏற்றத்தில் மகிழும் நண்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உனது நற்பணிகள்

    ReplyDelete