களவு போகும் கல்வி
மு.நியாஸ் அகமது.
இயல்வாகை வெளியீடு.
அதுதான் உண்மை.
உலகமயம் ,தாராளமயம் எல்லாம் கல்வி நிறுவவனங்களுக்கும் வரப்போகிறது.
இந்திய நுகர்வோரை ( மாணவர்கள்தான்! ) நோக்கி பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் கடைவிரிக்க காத்திருக்கின்றன.
வானளாவிய கட்டிடங்களில் வெள்ளைத் தோலோடு குட்டை பாவாடையில் மிஸ் இருக்கும்போது நமது தனியார் பள்ளிகளின் பாடு திண்டாட்டம்தான்.
கட்டணம் செலுத்த டாலரோடு தயாராக இருங்கள்..
-இவை எதுவும் கற்பனையல்ல. இந்தியா கொண்டுவரத்துடிக்கும் துடிக்கும் WTO-GATS ஒப்பந்தத்தால் நமக்கு கிடைக்க இருக்கிற பரிசு இதுதான்.
இந்த சிக்கலை விரிவாக ஆராய்கிறது இச்சிறுநூல்.நம்மை நோக்கி வரும் ஆபத்தை அறிய அவசியம் படியுங்கள்.
No comments:
Post a Comment