கத்தியின்றி ரத்தமின்றி!
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
நூலாசிரியர்:
லாரா கோப்பா.
தமிழில்:
மகாதேவன்.
விகடன் பிரசுரம்.
757,அண்ணா சாலை
சென்னை-600002.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில், மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையால் ஈர்க்கப்பட்டு, நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியினர் .
சுதந்திரத்துக்குப் பின்பும், அகிம்சை வழியில் பூதான இயக்கம், வெண்மணி மக்களுக்கான போராட்டம் இறால் பண்ணை எதிர்ப்புப் போராட்டம் என வயோதிக நிலையிலும் களத்தில் இருக்கும் இவர்கள் காந்தியத்தின் வாழும் குறியீடுகள்.
காந்தியவழியிலான இவர்களது இலட்சிய வாழ்க்கையை அறிந்த இத்தாலிய நாட்டவரான லாரா கோப்பா இந்தியா வந்து இவர்களுனேயே வாழ்ந்து, வாழ்க்கை வரலாற்று நூலை இத்தாலியில் எழுதினார். பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வந்துள்ளது.
இத்தம்பதியினரின் தியாகங்களை இக்கால இளைய சமுதாயத்தினர் படித்து உணர வேண்டியது, மிக அவசியம்.
No comments:
Post a Comment