Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 37 .கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ

கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ
இடைப்பாடி அமுதன்
அனுராதா பதிப்பகம்.


உள்ளூர் வரலாறு தெரியாமல் உலக வரலாறு படித்து என்ன பலன்.

இந்நூல் தாமஸ் மன்றோ என்ற ஆங்கிலேய ஆட்சியாளரின் வரலாரோடு பாரமகால் எனப்படும் கிருஷ்ணகிரி ,தர்மபுரி சேலம் உள்ளிட்ட பகுதியின் 250 ஆண்டுகளுக்கு முந்தய வரலாற்றையும் பதிவு செய்கிறது.

1779ல் தன் பதினெட்டு வயதில் பிரிட்டிஷ் படையில் வீரனாகச் சேர்ந்து இந்தியாவுக்கு வந்த சர் தாமஸ் மன்றோ பல ஆண்டுகள் தருமபுரி பகுதியில் பணியாற்றி படிப்படியாக பதவி உயர்வுபெற்று பின்னாளில் சென்னை மாகான கவர்னராக உயர்ந்தவர்

இந்தியாவை பெரிதும் நேசித்த மன்றோ வழக்கமான ஆங்கில அதிகாரிகள் போலன்றி மக்களுடன் நெருக்கமாக பழகக்கூடியவராகவும், அவர்களின் அன்றாடத் துயரங்களை அறிந்தவராகவும் இருந்தார். தென்னிந்தியாவில் ரயத்துவாரி நில வரி வசூல் முறையை நடைமுறைப்படுத்தியதால் 'ரயத்துவாரியின் தந்தைஎன்று கொண்டாடப்படுகிறார்.

மன்றோவின் கடிதங்கள், ஆவணங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட இந்நூல் மிக சுவாரசியமானது.


No comments:

Post a Comment