Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 20.எங்கள் ஐயா


எங்கள் ஐயா.
பெருமாள்முருகன் பற்றி       மாணவர்கள்
 
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி சாலை
நாகா்கோவில்-629 001.




                                 
எழுத்தாளர், பேராசிரியர் பெருமாள்முருகனைப் பற்றி அவரது மாணவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
...
எளிய பின்னனியிலிருந்து பல்வேறு கஷ்டங்களுக்கிடையே கல்லூரியில் தமிழ் படிக்க சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு இரட்சகராக இருக்கிறார் பெருமாள்முருகன்.

  கல்லூரி படிப்பு முடித்து பல ஆண்டுகளுக்குப்பின் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் தங்கள் ஆசிரியரைப்பற்றி எழுதியுள்ளதிலிருந்து தெரிகிறது.

ஒரு பேராசிரியராக வகுப்பறையில் கற்பித்தலோடு இல்லாமல் மாணவர்களின் திறமைகளைக் கண்டு ஊக்குவிப்பவராக,ஆய்வு நெறியாளராக,வேலைவாய்ப்புக்கு வழிகாட்டியாக எல்லாவற்றுக்கும் மேலாக உற்ற நண்பனைப்போல குடும்ப உறவுகளைப் பேணும் அரிதான ஆசிரிய மாணவர் உறவு இது.

நெகிழ்சியான அனுபவங்களின் தொகுப்பு! .
ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டியநூல்.

அடுத்து பெருமாள்முருகன் மாணவர்களுடனான தனது அனுபவங்களை அவசியம் எழுதவேண்டும்

No comments:

Post a Comment