Friday, August 4, 2017

ஆசிரியர் நூலகம் 44. பாரதி கல்விச்சிந்தனைகள்


பாரதி கல்விச்சிந்தனைகள்
  தொகுப்பு:.இரவீந்திரன் 
வெளியீடு: பாரதி புத்தகாலயம்



 

கவிஞன் என்ற மிகச்சின்ன வட்டத்திற்குள் அறியப்பட்டவன் பாரதி. தன் பத்திரிக்கை வாழ்வில் தொடர்ந்து உண்மைக் கல்விக்கான குரலை எழுப்பியபடியே இருந்துள்ளான்.
ஒரு மாபெரும் சிந்தனையாளனை அவன் மறைந்து நூறாண்டுகள் நெருங்கும் சமயத்திலும் மக்களுக்கு கொண்டு சேர்க்காதது வெட்கப்படவேண்டிய விஷயம்.

1910 ல் பாரதி தேர்வுமுறை பற்றி எழுதியதைப் பாருங்கள்,

"இந்நாட்களில் ஆங்கிலக் கல்வி கற்கும் சிறுவர்களுக்குப் பிரவேச பரீக்ஷையில்(matriculation) தேறுவதென்றால் யமன் வாயிலிருந்து தப்பிப்பிழைத்தது போலிருக்கிறது.சென்ற டிஸம்பர் மாஸத்தில் சென்னை ராஜதானியில் நடைபெற்ற இந்தப் பரீக்ஷையில் தேறினவர்களின் ஜாபிதா இப்போது தயாராய்விட்டது. இது சீக்கிரத்திலேயே வெளிவரும். இதன்படி பரீக்ஷையில் தேறியவர்கள் நூற்றுக்குப் பத்து பேர்களே. மற்ற தொண்ணூறு சிறுவர்களின் கழுத்திலும் சிவப்புமைப் பேனா என்னும் கத்தியை வைத்து ஒரே வீச்சாக வீசப்பட்டது… 1907ம் வருஷத்தில் நடந்த இந்தப் படுகொலையில் நூற்றுக்குப் பதினேழு பேர்கள் தப்பித்துக் கொண்டனர். இவ்வருஷமோ நூற்றுக்குப் பத்து பேர்கள்தான் தப்பித்துக் கொண்டனர்.
இந்தத் தப்பு யாருடையது? பரீக்ஷைக்குப் போகும் பிள்ளைகளினுடையதா? அல்லது அவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் வைக்கும் உபாத்தியாயர்கள் தப்பா? அல்லது இவர்களை இப்படிக் கொலை புரியக் கேள்வி கேட்பவர்களின் தப்பா? அல்லது வித்தை இலாகாவுக்குத் தலைமையாய் இருந்து பாடப் புஸ்தகங்களை விதிக்கும் வித்தை அத்யட்சகரின் தப்பா? அல்லது ஆங்கிலத் துரைத்தனத்தார் இலாகா ஸங்கதியா? அல்லது இச் சிறுவர்களின் பெற்றோர்களின் தப்பா? இந்தச் சிறுவர்களின் விடைகளைத் திருத்துபவர்களின் தப்பா? அல்லது சொல்லிக் கொடுப்பதொன்று, கேட்பதொன்றா? அல்லது இந்தியனாய்ப் பிறந்த பாபமா? பணத்தையும் கொட்டிக் கொடுத்து இராப்பகல் கண்விழித்து உடம்பையும் கெடுத்துக் கொண்டு படிப்பதின் பயனா? உண்மை தெய்வத்திற்குத்தான் வெளிச்சம்!”

விரிவாக இன்னும் பாரதியை, அவன் கல்விச் சிந்தனைகளை அறிய அந்தப் புத்தகத்தை அவசியம் படியுங்கள்.


No comments:

Post a Comment