Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம் 15. இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு பாகம் 2




இந்திய    வரலாறு, காந்திக்குப் பிறகு
பாகம் 2

கிழக்கு பதிப்பகம்
177/103 அம்பாள் கட்டடம்
அவ்வை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை-600014.



India After Gandhi புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பின் இண்டாம் பாகம்.
துப்பறியும் நாவலுக்குறிய சுவாரசியத்தோடு எழுதப்பட்ட வரலாற்று நூல்.

இப்புத்தகம் 1960 களிலிருந்து தொடங்குகிறது. 1964 ல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானது, அதனைத் தொடர்ந்து இந்திரா காந்தி பிரதமரானது, நேருவுக்கும் இந்திரா காந்திக்குமான முரண்பாடுகள், அதன் விளைவாக ஏற்பட்ட அவசரநிலைப் பிரகடனம்

 நிலையில்லாத ஆட்சிகள், மீண்டும் இந்திரா காந்தி, அவரது இளைய மகன் சஞ்சயின் அரசியல் பிரவேசம், அவருடைய சறுக்கல்கள் மற்றும் மரணம், பின்னர் ஏற்பட்ட கலவரங்கள், இந்திரா காந்தியின் தோல்விகள், அதனால் இந்திரா காந்தி படுகொலை, அரசியலையே விரும்பாத ராஜீவ் காந்தி அரசியலுக்கு வந்தது, அவருடைய பொருளாதாரத்திட்டங்கள், விடுதலைப்புலிகள் மீதான செயல்பாடுகள், ராஜீவ் காந்தியின் மரணம் என சுதந்திர இந்தியாவின் பெரும்பாலான அனைத்து நிகழ்வுகளையும் முழுக்க முழுக்க ஆதாரங்களோடு மிக விரிவாக எழுதியுள்ளார் குஹா.

சுதந்திர இந்திய வரலாற்றினை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்




இந்திய    வரலாறு, காந்திக்குப் பிறகு
பாகம் 2

கிழக்கு பதிப்பகம்
177/103 அம்பாள் கட்டடம்
அவ்வை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை-600014.

No comments:

Post a Comment