Wednesday, August 2, 2017

ஆசிரியர் நூலகம் - 1. டோட்டோ சான்.


          
டோட்டோ சான்.  
ஜன்னலில் ஒரு சிறுமி.

டோட்டோ சான் துறுதுறுவென ஏதேனும் செய்துகொண்டேயிருக்கும் சுட்டிக்குழந்தை. 
இதனாலேயே அவள் பள்ளியிலிருந்து தொடர்ந்து விரட்டப்படுகிறாள்
 எந்தப் பள்ளியும் அவளை அதிக நாட்கள் இருத்திக்கொள்ள சம்மதிப்பதில்லை.
இறுதியில் அவள் வந்தடைவது டோமாயி என்ற முன்மாதிரி பள்ளிக்கு.

டோமாயி பள்ளி சாதாரணப்பள்ளி அல்ல, இனி பயன்படாது என ஒதுக்கப்பட்ட, ரயில் பெட்டிகளை வாங்கி, அதை குதூகலமான வகுப்பறைகளாக்கியுள்ளனர்.
வரையறுக்கப்பட்ட பாடநூல்களோ, பாடவேளையோ இல்லை.குழந்தைகளை மையப்படுத்தி இயற்கையாக பாடங்களை போதித்த பள்ளி தான் டோமாயி.

டோட்டோவின் உண்மைப் பெயர் டெட்சுகோ குரோயாநாகி. பின்னாளில் அவள் உலகப் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ணத் தூதராகவும் ஆனார்

 அதற்கு டோமாயி பள்ளியும், அதை நடத்திய கோபயாஷியும்தான் முக்கியக் காரணம் என்றும் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தையும் "டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி" என்ற பெயரில் அவர் புத்தகமாக எழுதியுள்ளார். அது வெளியான இரண்டு வருடத்தில் ஜப்பானிய மொழியில் 50 லட்சம் பிரதிகள் விற்றது. உலகப் புகழ்பெற்ற இந்தப் புத்தகம் பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகமிது.
அனைத்து பள்ளி நூலகங்களிலும் உள்ளது !.

1 comment:

  1. ஆம் மிகமுக்கியமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் வாசிக்கவேண்டிய புத்தகம்

    ReplyDelete