Thursday, August 3, 2017

ஆசிரியர் நூலகம்14. இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு பாகம் 1









இந்திய    வரலாறு, காந்திக்குப் பிறகு
பாகம் 1

கிழக்கு பதிப்பகம்
177/103 அம்பாள் கட்டடம்
அவ்வை சண்முகம் சாலை
ராயப்பேட்டை
சென்னை-600014.

 
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹாவின் India After Gandhi நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு.

இந்தியா அவநம்பிக்கையில் பிறந்ததேசம். 1947ல் நிகழ்ந்த கலவரங்களைக் கண்ட எவரும் இந்தியா சில ஆண்டுகள்கூடத் தாக்குப் பிடிக்காது என்றுதான் நினைத்திருப்பர். ஆனால்
இந்தியா அரைநூற்றாண்டுகளாக ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது. மெதுவாக என்றாலும் உறுதியான பொருளியல் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. அதன் அத்தனை சிக்கல்களுடனும் போராட்டங்களுடனும் இன்னும் உயிருள்ள ஒரு பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது எப்படி என்ற கேள்வியைத்தான் இந்தப் பெரிய நூல் மிக விரிவாக நுட்பமான தகவல்களினூடாக விவாதித்துக்கொண்டிருக்கிறது

 
 
பிரிவினை
காந்தி மரணம்
காஷ்மீர்
சமஸ்தானங்கள் இணைப்பு
அரசியல் அமைப்புச்சட்டம்
முதல் தேர்தல்
சிறுபான்மையினர் பழங்குடியினர் போராட்டம்  


 போன்ற முக்கிய நிகழ்வுகள் இந்த முதல் பாகத்தில் ஆதாரத்தோடு
அலசப்பட்டுள்ளது.ஒரு வரலாற்று நூலை நிறுத்தமுடியாத உத்வேகத்துடன் வாசித்து முடிக்க முடியும் என்று இந்நூலை முன்வைத்துச் சொல்லலாம்.


உங்கள் நூலகத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய நூலிது.
 



No comments:

Post a Comment