Tuesday, October 29, 2024

தண்ணீரின் சிரிப்பு



தண்ணீரின் சிரிப்பு

 பூவிதழ் உமேஷ்

எதிர் வெளியீடு 

--------------------------------


துக்கத்தை போல எதுவும் நெருக்கமாக நம்மைப் பாதிப்பதில்லை

 எனவே துக்கத்தை போல 

என்னிடம் நெருக்கமாக இருங்கள்.



நான் பாலைவனத்தில்

 ஒரு வசனத்தை எழுதி உள்ளேன் 

அதை வானத்திலிருந்து மட்டுமே படிக்க முடியும்



எனக்கு பறப்பதற்கு

 இறக்கைகள் எதுவும் முளைக்கவில்லையே 

என்ற கவலை எதுவுமில்லை

 நான் மரிப்பேன் 

நான் புதைவேன் 

நான் மண்ணாவேன் 

தூசாகி 

காற்றில் பறப்பேன்


பகிர்ந்து அளிக்க தெரிந்தவர்கள்  கடவுளோடு சேர்ந்து சாப்பிடுகிறார்கள் 


நல்ல புத்தகத்தின் ஒவ்வொரு தாளையும் 

ஒரு கதவு போல திறந்து

 உள்ளே போகிற வாசகன்

கடைசியில் ஒரு தேவதையிடம் கை குலுக்குகிறான்



எங்கு செல்கிறோம் என்று தெரியாத போது 

ஏன் வேகமாக ஓட வேண்டும்? 



மௌனம் கசப்பை குறைக்கிறது 


எலியை வளைக்குள் பார்த்துவிட்ட பூனை

அதன் கால் தடத்தின் மீதே

 அமர்ந்து ஓய்வெடுக்கிறது



இனி இந்தப் பழத்தை

கிளைக்குத் திருப்பி அனுப்ப முடியாது

என்று நினைத்தபோது

ஆதாம் ஆப்பிளைக் கடித்தான்


வெளிப்படையான கேள்வி

 எப்போதும் பதிலை பொதுவில் வைத்திருக்கிறது



மிக நீளமான கேள்விகள் பெரும்பாலும் மிகச்சிறிய பதிலை பெறுகின்றன

அல்லது மௌனத்தை பதிலாகப் பெறுகின்றன


வேறு எந்தப் பரிசையும் 

விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு

 அன்பு ஒரு பரிசாக கிடைக்கிறது


எல்லாவற்றுக்கும் மேலாக மரணம் என்பது 

வாழ்க்கை இருந்தது என்பதற்கான ஒரு அறிகுறி 


எல்லா பெண்களும் 

தங்களை மிகவும் அழகிகள் என்று நினைப்பதாலும்

 எல்லா ஆண்களும் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைப்பதாலும்

பூமியில்

முட்டாள்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறார்கள்


நான் தொடும் அளவுக்கு

வானம் இறங்கி வரட்டும் என்று ஆசைப்படவில்லை

ஆனால் வானத்தை தொட்டுப் பார்க்கும் அளவு


உயரமாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

No comments:

Post a Comment