தீரா உலா
கி.ச.திலீபன்
நடுகல் பதிப்பகம்
9865442435
-----
பயணங்களை விரும்பாதவர் யாருமில்லை. ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தனியாளாக 116 நாட்கள் 16000 கிலோமீட்டர் இந்தியாவை சுற்றிய திலீபன் அவர்களின் அனுபவங்களே இந்நூல். அவரது பயணம் நமது வழமையான திட்டமிட்ட சொகுசான பயணம் போலல்ல. இலக்கின்றி, பெரிய நிதி ஆதாரமின்றி, பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி தேசாந்திரியாக சுற்றித்திரிந்த அனுபவம்.
கன்னியாகுமரியில் தொடங்கும் இப்பயணம் குவஹாத்தி- -தவாங்-பும்லா பாஸ் -தேஸ்பூர் - கோஹிமா - இம்பால் - மோரே - காத்மாண்டு -போகரா - முக்திநாத் - காசி - ரிஷிகேஷ் - கேதார்நாத் -டேராடூன் - மசூரி - சிம்லா- சண்டிகர் - ஜம்மு - ஸ்ரீநகர் -லே லடாக் - மணாலி கசோல் - அமிர்தசரஸ் - அஜ்மீர் ஜெய்ப்பூர் -டையூ - டாமன் - கோவா - கோவை - எத்தனையோ நிலங்கள், விதவிதமான மனிதர்கள் அவர்களது கலாசாரம், வாழ்வியல் என விரிகிறது பயணம்.
செல்லும் இடத்தின் சிறப்புகளை, வரலாறுகளை அடுக்கிக் கொண்டே போகாமல், தான் சந்தித்த மக்களை, கண்ணால் கண்டு ரசித்தவற்றை மட்டும் விவரித்து சொல்வதே இந்நூலின் சிறப்பு.
செல்லும் இடங்களில் புதுப்புது அனுபவங்கள். கோஹிமாவில் இறைச்சிக்காக விற்கப்படும் தவளைகள் ,மோரே நகரில் ருசித்த நாய்க்கறி, தற்செயலாய் முகநூலில் அறிமுகமான தேஸ்பூர் இளம் பெண்ணின் ஒருதலைக்காதல், ஜன்னலோர இருக்கைக்காக கன்னத்தில் அடி வாங்கிய அனுபவம், ஸ்ரீநகரில் மடிக்கணினியை திருட்டுக் கொடுத்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சோகம்.
திலீபனுடன் நாமும் பயணித்த அனுபவம். நாமும் இதுபோல பயணம் கிளம்ப வேண்டும் என்ற உந்துதலை தரும் நூல்.

No comments:
Post a Comment